Thursday, July 31, 2014

மணிப்பூர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; ராணுவ வீரர் ஒருவர் காயம்

மணிப்பூர் மாநிலம் நுங்கொவ் பகுதியில் அசாம் ரைபிள் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். காயம் அடைந்த ராணுவ வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டை சுமார் 3 மணி நேரம் நீடித்துள்ளது. இறுதியில் சில தீவிரவாதிகள் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment