டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது. கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும்" என்றுஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment