Thursday, July 31, 2014

மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நேற்று இந்தியா வந்தார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். ஜான் கெர்ரியுடன் உயர்மட்ட குழு ஒன்றும் வந்துள்ளது. இன்று வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை ஜான் கெர்ரி சந்தித்து பேசுகிறார். பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, வர்த்தம், முதலீடு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். பொதுநலன் தொடர்பான சர்வதேச விவகாரங்களும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.


No comments:

Post a Comment