மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வசாயில் 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. வசாய் பகுதியில் உள்ள மும்பை– ஆமதாபாத் சாலையில் வெள்ளநீர் இடுப்பளவிற்கு ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் புனே மாவட்டம் அம்பே கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மழையால் நிலச்சரிவில் 40 வீடுகள் சேற்றில் புதைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 150 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த ரெயில் தண்டவாளங்களும் மண்ணிற்குள் புதைந்துள்ளது.
No comments:
Post a Comment