Wednesday, July 30, 2014

மராட்டியம், குஜராத்தில் கனமழை; மழை காரணமாக புனேயில் நிலச்சரிவு; கிராம மக்கள் தவிப்பு

மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஊரக பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால்களில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது. இந்த கனமழையால் தானே மாவட்டம் வசாயில் உள்ள வைத்தர்ணா ஆற்றின் கரையை மூழ்கடித்து வெள்ளநீர் அங்குள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. சுமார் 50 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் தவித்தனர். பல வீடுகளில் இருந்த பாத்திரங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.


No comments:

Post a Comment