Tuesday, July 29, 2014

கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள்; எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. பாராளுமன்றம் கூடியதும், இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்; கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உளவு பார்க்கும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக நிதின் கட்காரி ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். என்று கூறினார்.


No comments:

Post a Comment