உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் நகரில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே வழிபாட்டுத் தல இடப்பிரச்சினை காரணமாக பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், செங்கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையின்போது, ஏராளமான கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனையடுத்து கலவரம் நடந்த 6 பகுதிகளில் கண்டதும் சுடுவதற்கும், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சஹரன்பூர் நகருக்கு 600 துணை ராணுவ வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment