இந்திய ராணுவ தளபதியாக கடந்த 26 மாதங்களாக பணியாற்றி வந்த விக்ரம் சிங், நேற்று பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் 26–வது தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் ராணுவத்தின் தெற்கு பிளாக் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதிக்கான பட்டையை ஓய்வு பெறும் தளபதி விக்ரம் சிங், புதிய தளபதி தல்பீர் சிங் சுஹாக்கிடம் வழங்கினார். 59 வயதான சுஹாக், அடுத்த 30 மாதங்களுக்கு இந்த பதவியில் நீடிப்பார். புதிய ராணுவ தளபதியாக பதவியேற்ற தல்பீர்சிங் சுஹாக்கிற்கு ராணுவ வீரர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலை துண்டிப்பு சம்பவம் போன்று இனி நடந்தால் எங்களுடைய பதிலடி மிகவும் கடினமாக இருக்கும் என்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மற்றும் உடனடியாக எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment