Thursday, July 31, 2014

60 பேரை பலிகொண்ட மீரட் தீவிபத்து குறித்து விசாரணை நடத்த ஒருநபர் கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் விக்டோரியா பூங்காவில் ஒரு தனியார் வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றது. 2000 மக்கள் கலந்து கொண்ட அந்த பொருட்காட்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 60 பேர் பலியாகினர். மேலும், பலர் காயம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் இடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கமிஷன் தங்களது அறிக்கையை 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment