Wednesday, July 30, 2014

மீசையை எடுக்காத முன்னாள் ராணுவ வீரரின் காது வெட்டப்பட்டது

பாட்னாவின் கவுதியா கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜ் வர்மா கடந்த திங்கள் கிழமை அன்று தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரை லல்கு யாதவ், பின்னா யாதவ் என்ற இரண்டு சகோதரர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அப்போது வர்மாவை அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும், மீசையை எடுத்துவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த முறை உன்னை மீசையுடன் பார்த்தோம் என்றால் மீசையை நாங்களே எடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அப்போது வர்மா அவர்களை எதிர்த்துள்ளார். அப்போது யாதவ் சகோதரர்கள் அங்கிருந்த சிலரை அழைத்து வர்மாவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது காதை பின்னா வெட்டியுள்ளார். வர்மாவின் பைக்கையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வர்மா போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment