மராட்டியத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு நேற்று அதிகாலை புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து அடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. மணலுடன் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. வேரோடு மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஒரு சில நொடிப்பொழுதில் மலையடிவாரத்தில் உள்ள பல வீடுகள் சுவடு தெரியாமல் புதையுண்டன.
No comments:
Post a Comment