Wednesday, July 30, 2014

டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 26-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தங்கள் பதவிகளை இழந்து 2 மாதங்கள் ஆகியும் முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேர் டெல்லியில் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளனர். அவர்கள், ஜெய்பால் ரெட்டி, அஜித் சிங், கிருஷ்ணா தீரத், சச்சின் பைலட், பல்லம் ராஜூ, கிரிஜா வியாஸ், பரூக் அப்துல்லா, பெனி பிரசாத் வர்மா, கபில் சிபல், ஸ்ரீகாந்த் ஜேனா உள்ளிட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தாங்கள் வசித்து வருகிற பங்களாக்களை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment