Thursday, July 31, 2014

புனே நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு; மழையினால் மீட்பு பணியில் தொய்வு

புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் கிராமத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்து உள்ளனர். 165க்கும் மேற்பட்டோர் இடையூறுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பல வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய் விட்டது. வீடுகள் மீது பாறைகள், மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் கனமழை காரணமாக அங்கு சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. மீட்பு படையினர் கால் ஊன்றி பணியை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இடையூறுகள் உள்ளன. இந்த நிலையில் மீட்பு பணியில் ஆளில்லா விமானமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மேலே அந்த விமானம் வட்டமிட்டு நிலவரத்தை கண்காணித்து வருகின்றது.


No comments:

Post a Comment