Wednesday, July 30, 2014

கட்காரி வீட்டில் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீடு டெல்லி தீன்மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து அதிநவீன உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து பா.ஜனதாவும், பிரதமரும் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இன்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment