அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி அஜய் யாதவ் நேற்று திடீரென்று, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 55 வயதான அஜய் யாதவ் ரேவாரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
No comments:
Post a Comment