இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இது, இந்திய–அமெரிக்க ராணுவ உறவு தொடர்பான பேச்சுவார்த்தை ஆகும். பாதுகாப்பு, எரிசக்தி போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றியும் விவாதித்தனர். பாரதீய ஜனதா கட்சியை அமெரிக்கா உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. சந்திப்பின்போது இப்பிரச்சனை குறித்து பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் அரசியல் தலைவர்களையோ, மற்றவர்களையோ அமெரிக்கா வேவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சுஷ்மா கூறியுள்ளார். அப்போது ஜான் கெர்ரி இப்பிரச்சனையை இரு நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் மூலம் பேசித் தீர்க்கலாம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment