Wednesday, July 30, 2014

பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீச்சு 13 பேர் பலி

இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கடந்த 8–ந் தேதி சண்டை தொடங்கியது. இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாமுனையில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் நகரங்கள் மீது காஸாமுனையில் இருந்து ராக்கெட் வீச்சுகள் நடைபெற்று வந்தன. ராக்கெட்டு வீச்சை நிறுத்த முடியாது என்று ஹமாஸ் இயக்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்தது. 24 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் காஸா முனை மீது நீண்ட கால தாக்குதல் நடத்துவதற்கு தனது நாடு தயாராக வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்தார்.


No comments:

Post a Comment