Thursday, July 31, 2014

ராய்பூர் வெடிவிபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி

ராய்பூரின் உர்லா கிராமத்தில் மின்சார பியூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஒ.பி. பால் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து சம்பவம் நடந்த போது தொழிற்சாலையின் மேலாளர் வெளியே சென்றிருந்ததால் அவர் உயிர்தப்பினார். அவர்தான் வெடிவிபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒ.பி. பால் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment