Thursday, July 31, 2014

பிரதமர் அலுவலகம் சோனியாவிற்கு எந்த கோப்புகளையும் அனுப்பவில்லை - மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அரசு கோப்புகள், சோனியாவின் பார்வைக்கு செல்வது வழக்கம். உயர் அதிகாரியான புலோக் சாட்டர்ஜிதான் அந்த கோப்புகளை எடுத்துச் செல்வார். இது மற்ற மந்திரிகளுக்கும் தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான நட்வர்சிங் பரபரப்பு தகவலை நேற்று வெளியிட்டார். ஆனால் இதனை அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகங் மறுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என் சுயசரிதை வெளியாகும் போது நட்வர் சிங் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்படும் என்று கூறினார்.


No comments:

Post a Comment