Wednesday, July 30, 2014

உத்தரகாண்டில் பேய் மழை; 4 பேர் பலி, வீடுகள் அடித்து செல்லப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் கனமழையினால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. 8 வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகமான மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாசியிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment