பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி இருவரும், சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு டெல்லியில் தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரித்தனர். பின்னர் இந்த சொத்துகளில் 90 கோடி ரூபாயை அவர்கள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு கடனாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சோனியாவும், ராகுலும்தான் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த ரூ.90 கோடியை அவர்கள் மறைமுகமாக அபகரித்துள்ளனர். இது கிரிமினல் குற்றங்கள் ஆகும் என அவர் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment