Friday, August 22, 2014

மோடியுடன் மேடையை பகிரமாட்டேன் என சபதம் செய்த முதல் மந்திரி பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்புகின்றனர். இதனால் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சில மாநில முதல்–மந்திரிகள் புறக்கணித்து வருகின்றனர். அரியானாவில் கடந்த புதன்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் முதல்–மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா பேசிய போது, பா.ஜனதா தொண்டர்கள் சிலர் மோடிக்கு ஆதரவாகவும், ஹூடாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதன் மூலம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதிய பூபிந்தர் சிங் ஹூடா, இனிமேல் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒருபோதும் மேடையை பகிரமாட்டேன் என்று கூறினார். மேலும், கோஷம் எழுப்பியவர்களை பாரதீய ஜனதா கட்சியே கூட்டியது. என்று கூறினார்.


No comments:

Post a Comment