மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் பதவி விலகுவதற்கு நெருக்கடி அளித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், பதவி விலக தனக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக ஒரு மாநிலத்தின் கவர்னர், சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்ததும், மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, என்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார். பதவி விலகாவிட்டால், பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் உறுதியாக தெரிவித்தார். இந்த செயல், அரசியல் சட்டத்துக்கு எதிரானது. என்று உத்தரகாண்ட் மாநில கவர்னர் அஜிஸ் குரேஷி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது
No comments:
Post a Comment