Friday, August 22, 2014

தேர்தல் தோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி

தேர்தல் தோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார். பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நரேந்திர மோடி அரசு தவறான கனவுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதாக சோனியா காந்தி கூறுகிறார். இது பொதுமக்களை அவமதிக்கும் கருத்து. முதலில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சோனியா காந்தி சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். தேர்தலில் அடைந்த படுதோல்வியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. இது தான் உண்மை. நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துகள் அவர்களது மன அழுத்ததையும், விரக்தியையும் தான் வெளிப்படுத்துகிறது.


No comments:

Post a Comment