காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் அரசு நிறுவனங்களிடமிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நன்கொடைகள் பெற்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், அன்னிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் ஆகியவற்றை மீறிவிட்டன என குற்றம்சாட்டி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஜனநாயக சீர்திருத்த சங்கம், மத்திய அரசின் முன்னாள் துறை செயலாளர் இ.ஏ.எஸ். சர்மா ஆகியோர் தொடுத்த இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு விசாரித்து, ‘‘அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா கம்பெனியும், அதன் துணை நிறுவனங்களும் கம்பெனிகள் சட்டப்படி வெளிநாட்டு கம்பெனிகள்; எனவே காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாந்தா மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றதற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது. எனவே இந்தக் கட்சிகள் மீது மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கடந்த மார்ச் மாதம் 28–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
No comments:
Post a Comment