மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, 16-வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். பாராளுமன்ற புதிய சபாநாயகராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மக்களவையில் அடுத்த வாரம் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. துணை சபாநாயகர் பதவியை அ.தி.மு.க. பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த மு.தம்பிதுரையின் பெயர் அடிபடுகிறது. இவர் சமீபத்தில் பாராளுமன்ற அ.தி.மு.க. குழுவின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த முறையும் அவர் இந்த பதவியை வகித்தார். பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment