மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர். இந்த நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று மூன்றாவது நாளாக மீட்பு பணி நடந்தது.
No comments:
Post a Comment