Tuesday, September 2, 2014

தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லை அருகே சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, அக்னூரில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடித்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய பகுதிக்கு சுரங்கப்பாதை செல்கிறது. ஆனால், இந்திய பகுதியில், சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறுவதற்கு இன்னும் பாதை தோண்டப்படாமல் அரைகுறையாக உள்ளது. இந்த சுரங்கப்பாதையை தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் அமைத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment