புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் உள்ள ஹன்கான் கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹன்ஜான் கிராமத்திற்கு சென்ற ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அங்கு இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
No comments:
Post a Comment