Sunday, September 21, 2014

ஆப்கானில் புதிய அரசு அமைக்க உடன்பாடு; பிரதமர் மோடி வரவேற்பு

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அங்கு தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படுகிறது. இதனால் அங்கு ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கலுக்கு தீர்வு பிறந்துள்ளது. அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் அஷ்ரப் கனி, அப்துல்லா அப்துல்லா இடையே காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. உடன்பாட்டில் இருவரும் கையெழுத்திட்டதும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர்.


No comments:

Post a Comment