2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடைய சிலர் கடந்த 15 மாதங்களில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்காவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாகவும், எனவே அவரை அந்த வழக்குகள் விசாரணையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ. இயக்குனரை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தவர்களின் வருகை பதிவேடு பட்டியலை, அது தொடர்பான ஆவணங்களையும் பொதுநல அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment