ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ என்ற விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் பேஸ்புக் பக்கத்தில் (ISRO's Mars Orbiter Mission) "எங்கள் கணக்கின்ப்டி, மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment