Monday, September 22, 2014

வழக்கை முடிக்க அறிக்கை; கோர்ட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்கிறது சி.பி.ஐ.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா மீதான வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தொடர்பாக டெல்லி சிறப்பு கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடுதல் கால அவகாசத்தை சி.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா மற்றும் மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பராக் மற்றும் சிலர் உள்ளிட்ட மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. சுரங்க ஒதுக்கீட்டில் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பராக் மீதும், அவரது துறை அதிகாரிகள் சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.


No comments:

Post a Comment