Sunday, September 21, 2014

இடைநீக்கம் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் மீது மானபங்க வழக்கு

இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் மீது மானபங்க வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மும்பை மால்வாணி போலீசில் கடந்த ஜூலை மாதம் 25 வயது மாடல் அழகி ஒருவர், போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் தன்னை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 முறை கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பின், டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து முன் ஜாமீன் பெற்றார். எனினும், கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான காரணத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


No comments:

Post a Comment