மங்கள்யான் விண்கலத்தில் உள்ள பிரதான எந்திரத்தில் சோதனை இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. விண்கலத்தில் உள்ள பிரதான திரவ எந்திரம் 4 வினாடிகள் சோதித்து பார்க்கப்பட்டது. என்று இஸ்ரோவின் (ISRO's Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ என்ற விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO's Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் "எங்கள் கணக்கின்படி, மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment