Monday, September 22, 2014

மேகாலயாவில் வெள்ளத்திற்கு 7 பேர் பலி, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

மேகாலாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கானோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தென்மேற்கு காரோ மலை மாவட்டத்தில் வெள்ளத்திற்கு 7 பேர் பலியாகியுள்ளனர். என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரவமாக நடைபெற்று வருகிறது. அங்கு விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment