Monday, September 1, 2014

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதுகிறது

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுத இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதில் 2 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.


No comments:

Post a Comment