Monday, September 1, 2014

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நீதிபதி முட்கல் கமிட்டி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்த விசாரணை கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி முட்கல் தலைமையிலான கமிட்டி என்.சீனிவாசன் உள்பட 13 நபர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தது. இந்த முதல்கட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment