நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் ஒரு கட்டமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரி சுரங்கம் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக, அப்போதைய நிலக்கரித்துறை செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவனத்தின் உரிமையாளர் குமார்மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் கடந்த வாரம் பிர்லாவுக்கு எதிரான இந்த வழக்கை முடித்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.
No comments:
Post a Comment