பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியும், தாஹிர் உல் காதிரி தலைமையிலான பாகிஸ்தான் அவாமி தெரீக் இ இன்சாப் கட்சியும் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களாக நடந்துவரும் இந்த போராட்டத்தில் சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினரும், போலீசாரும் போராட்டக்காரர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment