Monday, September 1, 2014

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையிடையே சண்டை

புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஹன்ஜான் கிராமத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும், துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. பாதுகாப்பு படையினர் கிராமத்தை சுற்றி வளைத்துள்ளனர்.


No comments:

Post a Comment