Monday, September 1, 2014

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச கட்டடத்தில் தீ விபத்து

கொல்கத்தாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள சட்டர்ஜி சர்வதேச கட்டடத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் 15 மற்றும் 16-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் அலுவலகங்கள் செயல்படுவதற்கு முன்னதாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்திற்கு உள்ளே யாரேனும் சிக்கியிருக்கலாம் என்று கூறுப்படுகிறது. தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment