மரண தண்டனை கைதிகளின் மேல்முறையீடு மனு திறந்தவெளி கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரையில் மரண தண்டனை கைதிகளின் மேல்முறையீடு மனு குறித்து நீதிபதியின் தனிஅறையில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மனு திறந்தவெளி கோர்ட்டில் வைத்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மரண தண்டனை கைதிகளின் மறு ஆய்வு மனு, இனி மூன்று நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் முன் விசாரிக்கப்படும். மரண தண்டனை கைதியின் மறுஆய்வு மனு இந்த பெஞ்ச் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டால், புதிய மனுவை ஒரு மாதங்களுக்குள் தாக்கல் செய்யலாம். என்று மனுதாரர்களுக்கு ஒரு வாய்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment