Saturday, September 20, 2014

மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி நடக்கும் தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு இன்னும் முடியவில்லை. இதே போல் சிவசேனா-பா.ஜனதா கூட்டணியும் இன்னும் உறுதி ஆகவில்லை. தொகுதி பங்கீட்டில் இந்த இரு கட்சிகள் இடையே இன்னும் ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. 150 தொகுதிகளில் சிவசேனா போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ஜனதாவுக்கு 119 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் பா.ஜனதாவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா கோரி வருகிறது.


No comments:

Post a Comment