Saturday, September 20, 2014

பாலியல் தொல்லை புகார்; ஆம் ஆத்மி தலைவர் மயான்க் காந்தி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினர் சிலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று அக்கட்சியின் பெண் தொடண்டர் ஒருவர் மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் கிரிமினல் புகார் மனு அளித்தார். அதில் கட்சியின் தொண்டர்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை மயானக் காந்தியிடம் கொண்டு சென்றதாகவும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தருண் சிங் மீது போலீசார் பாலியல் தொல்லை உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment