ஷின்ஜோ அபேவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டிக்கொள்கிறேன். ஜப்பானை முன்னேற்றத்தில் புதிய உயரங்களை அடைய செய்ய தங்களை வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு ஜப்பான் பிரதமர் அபே வாழ்த்து தெரிவித்து இருந்தார். நியூசிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டு பிரதமர் ஜான் கேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment