Sunday, September 21, 2014

காஷ்மீரை மீட்கப்போவதாக கூறுவதா? ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பகல் கனவு காண்கிறார்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த கட்சி கூட்டத்தில், ‘ நான் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து திரும்ப பெறுவேன். ஒரு அங்குல இடத்தை கூட விடாமல் முழுமையாக மீட்பேன்’ என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவின் கருத்தை கண்டிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இ. அகமது நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


No comments:

Post a Comment