Sunday, September 21, 2014

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே சில பகுதிகளில் லேசான மோதல் ஏற்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை. இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.


No comments:

Post a Comment