Sunday, September 21, 2014

‘கமாண்டாக்ஸ்’ என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் வேட்டையில் போலீசாருக்கு உதவ மோப்ப நாய்கள் படை

இந்தியாவில் 9 மாநிலங்கள் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள மாநிலங்களாக உள்ளன. அங்கு துணை ராணுவப்படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ–திபெத்திய எல்லை போலீஸ், எல்லை பாதுகாப்பு படை போன்ற பல கமாண்டோ படைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய ரிசர்வ் போலீசில் 120 பட்டாலியன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இப்போது இவர்களுக்கு உதவியாக மோப்ப நாய்கள் படை உருவாக்கப்படுகிறது. 2001–ம் ஆண்டு இந்தோ–திபெத் எல்லை போலீசார் முதல்முறையாக ‘பெல்ஜியன் ஷெப்பர்டு’ இன நாய்களை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கவும், பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தினர். எனவே இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய்கள் படையை உருவாக்க மத்திய உள்துறையும் அனுமதி கொடுத்துவிட்டது.


No comments:

Post a Comment