இலங்கையை தளமாக வைத்து, கடல் வழியாக தமிழகத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை நிரூபிக்கும் வகையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர்சுபேர்சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு நிறுவனத்தின் கையாட்களாக செயல்பட்டு, தங்களது உளவாளிகளை, தமிழகத்திற்குள் ஊடுருவ விட்டுள்ளனர். அவ்வாறு ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் 7 பேரை தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு படை போலீசாரும் வேட்டையாடி ஏற்கனவே பிடித்துள்ளனர். கடந்த 2012–ம் ஆண்டு, திருச்சியில் வைத்து தமீம்அன்சாரி என்ற உளவாளியை, தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment